உலகில் பெரும் நிறுவனங்களுக்குள் ஊடுருவியுள்ள 20 இலட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்!!
உலக நாடுகளில் உள்ள முக்கியமான பெரு நிறுவனங்களில் 20 இலட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளதாக அவுஸ்ரேலியாவில் இருந்து வெளியாகும் ‘த அவுஸ்ரேலியன்’ செய்தித்தாள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
உலகத்தின் மிகப் பெரும் தயாரிப்பு நிறுவனங்கள், வங்கிகள், ஊடக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் சுமார் 20 இட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இரகசியமாகப் பணிபுரிந்து வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனங்களின் பட்டியலில் தயாரிப்புத் துறையில் போயிங் மற்றும் வோக்ஸ்வேகன். மருந்துத் தயாரிப்பில் பைஸர் மற்றும் அஸ்ட்ராசனேகா, வங்கிகளில் ஏ.என்.இசட் மற்றும் ஹெச்.எஸ்.பி.சி ஆகியவையும் அடங்கும்.
குறிப்பாக ஹெச்.எஸ்.பி.சி மற்றும் ஸ்டாண்ட்டர்ட் சார்டட் ஆகிய இரு வங்கிகளில் மட்டும் 700ற்க்கும் மேற்பட்டவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் என்று தெரியவந்துள்ளது.