முக கவசங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள்!! -வெளியிட்ட அதிர்ச்சி தகவல்-
கொரோனாவுக்கு எதிரான கருவிகள், முக கவசங்கள் பற்றி அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியின் விஞ்ஞானிகள் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழுவினர் ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.
இந்த ஆராய்ச்சி முடிவுகளை அவர்கள் ஜாமா உள்மருத்துவ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.
பல்வேறு வகையிலான நுகர்வோர் தர முக கவசங்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட முக கவசங்களின் பாதுகாப்பை மதிப்பிட்டு அதில் தெரிவித்து இருக்கிறார்கள்.
அறுவை சிகிச்சை முக கவசங்கள் 38.5 சதவீத வடிகட்டும் செயல்திறனை கொண்டுள்ளன; அதே நேரத்தில் அவற்றை முறையாக காதுகளில் அணிந்து இறுக்கமாக இருந்தால் அவை 60.3 சதவீதம் அளவுக்கு செயல்திறனை கொண்டிருக்கும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ளனர்.
2 அடுக்குகளை கொண்ட நைலான் முக கவசங்கள் 80 சதவீத செயல்திறனை வழங்கும் என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
என் 95 ரெஸ்பிரேட்டர் முக கவசங்களை பொறுத்தமட்டில் அவை அதிகபட்சமாக 90 சதவீதம் வரை பாதுகாப்பை தரும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.