SuperTopAds

வைத்தியகாலையில் பணியாற்றியதால் கொரோனா!! -9 மாத சிகிச்சைக்குப் பின் தொற்றிலிருந்து மீண்ட பெண்-

ஆசிரியர் - Editor II
வைத்தியகாலையில் பணியாற்றியதால் கொரோனா!! -9 மாத சிகிச்சைக்குப் பின் தொற்றிலிருந்து மீண்ட பெண்-

அமெரிக்காவில் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் தொடர்ந்து 9 மாதங்கள் சிகிச்சை பெற்ற பின்னர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

அந்நாட்டின் தெற்கு புளோரிடா மாகாணத்தின் மையாமி நகரில் உள்ள ஜாக்சன் மெமோரியல் வைத்தியசாலையில் உதவியாளராக பணியாற்றிவந்தவர் ரோசா பிலிப் (41). வைத்தியசாலையில் பணியாற்றிவந்த அவருக்கு கடந்த மார்ச் 9 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் தான் பணிபுரிந்துவந்த அதே வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே நீரிழிவு மற்றும் ஆஸ்துமா நோய்கள் இருந்துள்ளன. இதனால், கொரோனா சிகிச்சை வழங்குவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. 

ஒரு கட்டத்தில் கொரோனாவின் உச்சபட்ட பாதிப்பால் அவதிப்பட்ட ரோசா இனி உயிர்பிழைக்கமாட்டார் என அவருக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர். 

ஆனாலும், முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து வைத்தியர்கள் அவருக்கு சிகிச்சை வழங்கி வந்தனர். அவர் 2 மாதங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை பெற்றுள்ளார். வைத்தியர்களின் விடா முயற்சியாலும், ரோசாவின் தன்னம்பிக்கையாலும் அவர் 9 மாதகால சிகிச்சைக்கு பின் நேற்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.