பதவியேற்ற முதல் 100 நாட்களில் 100 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி!! -ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு-
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதிவியேற்று முதல் 100 நாட்களில் 100 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை தான் இலக்காக கொண்டுள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
பதவியேற்கும் முதல் மாதங்களில் தொற்று நோயை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. எனினும் தொடர்ந்து விரைவாகச் செயற்பட்டு தொற்று நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பைடன் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி இன்று பைடன் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள நிலையில் தனது சுகாதாரக் குழுவை அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன், 100 நாட்களுக்கு கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் அமெரிக்கர்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் டெலாவேரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜோ பைடன், தனது ஆட்சிக் காலத்தின் முதல் 100 நாட்களில் 100 மில்லியன் அமெரிக்கர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போட எதிர்பார்த்துள்ளதாகக் கூறினார்.
கொரோனாவை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர முடியாது. எனினும் படிப்படியாக இதிலிருந்து நாங்கள் வெளியேற முடியும். அமெரிக்கர்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்ற முடியும் எனவும் பைடன் தெரிவித்தார்.