தற்கொலை தாக்குதலுக்கு பயிற்சி பெற்ற குற்றச்சாட்டில் 6 பெண்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்..!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரியான சஹரான் ஹாசீமின் அடிப்படைவாத போதனைகளில் பங்கெடுத்ததுடன் தற்கொலை தாக்குதல் பயிற்சி பெற்ற குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரதேசத்தில் 6 பெண்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸின் ஆலோசனைக்கு அமைய
காத்தான்குடி பிரதேசத்தில் சஹ்ரானுடன் தொடர்பைப் பேணிவந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் அண்மையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற
மற்றும் அவர்களுடன் தொடர்பைப் பேணிவந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 15 ஆண்களும் 6 பெண்களுமாக 21 பேரை கடந்த 4ஆம் திகதி கைது செய்துள்ளதாகவும் இதில் கைது செய்யப்பட்டவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.