போடாப்பட்டது முதலாவது கொரோனா தடுப்பூசி!! -மொத்தமாக 2.5 கோடி பேருக்கு போட முடிவு-
பிரிட்டனில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பைசர் மற்றும் ஜேர்மனியின் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்நிலையில் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி 90 வயதான மார்கரெட் கீனன் (Margaret Keenan) என்பவருக்கு முதன் முதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக சுகாதாரத்துறை முன் களப் பணியாளர்கள், முதியோருக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது. மொத்தம் 2.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.