கொரோனா நெருக்கடியை அடுத்து இருவருக்கு தூக்கு தண்டனை!! -வடகொரிய ஜனாதிபதி உத்தரவு-

ஆசிரியர் - Editor II
கொரோனா நெருக்கடியை அடுத்து இருவருக்கு தூக்கு தண்டனை!! -வடகொரிய ஜனாதிபதி உத்தரவு-

வடகொரியாவின் ஜனாதிபதி அங்கு சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். உலக நாடுகளை கொரோனா வைரஸ் உலுக்கி வந்தாலும், வடகொரியா மண்ணில் இதுவரை ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை என்று அந்நாடு பெருமிதப்படுகிறது.  

இந்த நிலையில், வடகொரியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரிகட்டும் வகையில் கிம் ஜாங் அன் மேற்கொண்ட நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிப்பதாய் அமைந்துள்ளது. 

அதாவது, பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு காரணமாக இருந்ததாகக் கூறி உயர் அந்தஸ்து கொண்ட ஒருவருக்கு தூக்கு தண்டனையை கிம் ஜாங் அன் அரசு நிறைவேற்றியுள்ளது. 

அதேபோல், கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு சுங்க விதிகளை மதிக்காமல் வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்த ஒருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மேலும், வடகொரிய கடலில் மீன்பிடிக்க தடை விதித்தும், தலைநகர் பியோங்யாங் நகரில் பொது முடக்கத்தை அமல்படுத்தியும் ஜனாதிபதி கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தகவல்களை தென்கொரியாவின் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.  


Radio