SuperTopAds

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் ட்ரம்ப்!!

ஆசிரியர் - Editor II

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை இதுவரை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப், தேர்வாளர்கள் குழு வாக்கெடுப்பில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை அடுத்து வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதாக கூறியுள்ளார்.

தேர்தலில் ஜனநாயக கட்சிக்கு சாதகமான வகையில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 270 மக்கள் பிரதிநிதி வாக்குகளை பெற்றாலே போதும் என்ற நிலையில், ஜோ பைடனுக்கு 306வாக்குகள் கிடைத்துள்ளன. டொனால்டு ட்ரம்புக்கு 232 மக்கள் பிரதிநிதி வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

இந்நிலையில் தேர்வாளர் குழு எதிராக வாக்களித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவீர்களா என கேட்டதற்கு நிச்சயமாக வெளியேறுவேன் என கூறிய ட்ரம்ப், தேர்வாளர் குழுவினர் பைடனை தேர்ந்தெடுத்தது தவறு. இது ஒரு பெரிய மோசடி என கூறினார்.

புதிய ஜனாதிபதி யார் என்பதை முடிவு செய்வதற்காக, டிசம்பர் 14 ஆம் திகதி தேர்வாளர்கள் குழு கூடி வாக்களிக்கவுள்ளனர்.