100 விநாடிகளுக்கு ஒரு சிறுவர் எச.;ஐ.வி. வைரஸால் பாதிப்பு!! -யுனிசெப் அதிர்ச்சி தகவல்-

ஆசிரியர் - Editor II

கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 100 விநாடிகளுக்கு ஒரு சிறுவர் அல்லது சிறுமி எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 3.2இலட்சம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 1.1இலட்சம் பேர் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனர்.

அந்த வகையில் கடந்த ஆண்டில் மட்டும் 100விநாடிகளுக்கு ஒரு சிறுவர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளார். எய்ட்ஸ் நோய் பரவலை தடுப்பது, அந்த நோய்க்கான சிகிச்சை ஆகியவை பாதிப்புக்குள்ளான முக்கிய பிரிவினருக்கு கிடைக்காத நிலை கடந்த ஆண்டிலும் தொடர்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து எச்.ஐ.வி. தலைமை செயலதிகாரி கூறுகையில், எச்.ஐ.வி. வைரஸால் ஏற்படும் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்காக பல ஆண்டுகளாக உலகம் போராடி வருகின்றது. ஆனால் அந்த நோயால் சிறுவர்கள் பாதிக்கப்படுவதும் உயிரிழப்பதும் இன்னும் தொடர்கிறது என கவலை வெளியிட்டுள்ளார்.

எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட தாய்க்கு பிறந்த குழந்தைகளுக்கும் பாலியல் வன்முறைக்குள்ளாகும் சிறுவர், சிறுமியர்களுக்கும் அந்த நோய் பரவுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Radio