SuperTopAds

திடீரென கரையொதுங்கிய நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள்!! -அதிர்ச்சில் அதிகாரிகள்-

ஆசிரியர் - Editor II
திடீரென கரையொதுங்கிய நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள்!! -அதிர்ச்சில் அதிகாரிகள்-

நியூசிலாந்தின் தொலைதூர சாதம் தீவுகளின் கரையோரடங்களில் 100 ற்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் மற்றும் டொல்பின்கள் இறந்த நிலையில் திடீரென கரையொதுங்கியுள்ளன.

சம்பவம் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது அங்கு சில திமிங்கிலங்கள் உயிருடன் காணப்பட்டன. அவை மீட்கப்பட்டு ஆழமான பகுதியில் விடப்பட்டன. எனினும் அதற்கிடையில் 97 திமிங்கலங்கள் மற்றும் மூன்று டொல்பின்கள் இறந்துள்ளன.

நியூசிலாந்திற்கு கிழக்கே 800 கி.மீ தொலைவில் உள்ள தீவுகளில் இந்தத் திமிங்கிலங்கள் மற்றும் டொல்பின்கள் கரையொதுங்கி இறந்தமைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

நியூசிலாந்தின் சாதம் தீவில் 1918 ஆம் ஆண்டு சுமார் 1,000 திமிங்கலங்கள் இதே போன்று கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.