கொரோனாவை கட்டுப்படுத்த 430 கோடி தடுப்பூசிகள் தேவை!! -கணிக்கும் உலக சுகாதார அமைப்பு தலைவர்-

ஆசிரியர் - Editor II
கொரோனாவை கட்டுப்படுத்த 430 கோடி தடுப்பூசிகள் தேவை!! -கணிக்கும் உலக சுகாதார அமைப்பு தலைவர்-

கொரோனாவை வைரசை கட்டுப்படுத்துவதற்கு சுமார் 430 கோடி டோஸ் தடுப்பூசிகள் உடடியாக தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் சிரேஸ்ட விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் கூறுகையில், பிரிட்டிஸ் மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகாவின் கொரோனா வைரசுக்கான தடுப்பூசி பரிசோதனை முடிவுகள் 90 வீத வெற்றி பெற்று இருந்தாலும் குறைந்த அளவிலான பரிசோதனை முடிவுகளிலே கிடைத்திருப்பது நம்பிக்கை அளிக்க தவறியதாக உள்ளது. 

மேலும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விடுபட அதிகளவிலான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் முழு வீச்சில் ஈடுபட வேண்டும் என்றார்.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கொரோனாவை கட்டுப்படுத்த குறைந்தது 430 கோடி டோஸ் தடுப்பூசிகள் உடனே வேண்டும் என கூறியுள்ளார்.


Radio