SuperTopAds

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று!! -3 நகரங்களை முடக்கி இலட்சக்கணக்கானோருக்கு பரிசோதனை-

ஆசிரியர் - Editor II
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று!! -3 நகரங்களை முடக்கி இலட்சக்கணக்கானோருக்கு பரிசோதனை-

சீனாவின் 3 நகரங்களில் கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அந்நகரங்களை சேர்ந்த இலட்சக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது. 

சீனாவில் தோன்றிய கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து இதுவரை அங்கு 86,442பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,634பேர் பலியாகினர். எனினும் அங்கு கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலையில் தியான்ஜின், ஷாங்காய், மன்சௌலி ஆகிய 3நகரங்களில் கடந்த வாரம் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஷாங்காய் நகரில் இருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இந்த மாதத் தொடக்கத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான விமான நிலைய ஊழியர் ஒருவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து பாதிப்புக்குள்ளானவர்கள் பணிபுரிந்த இடத்துடன் தொடர்புடைய நபர்கள் ஏராளமானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தியான்ஜின் நகரில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்நகரை சேர்ந்த 22இலட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.