ஏழை நாடுகளுக்கு 200 கோடி கொரோன தடுப்பு மருந்துககள்!! -அடுத்த ஆண்டு யுனிசெப் வழங்கும்-
எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு சுமார் 200 கோடி கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படுமென யுனிசெப் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யுனிசெப் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகு 2021ஆம் ஆண்டில் சுமார் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும். மேலும் ஒரு பில்லியன் ஊசிகளும் வழங்கப்படும். இது தொடர்பாக 350விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளது.
கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்காவை தொடர்ந்து ரஷ்யாவும் தான் தயாரித்த ஸ்புட்னிக்-5 என்ற கொ ரோனா தடுப்பு மருந்து 92 வீதம் பலன் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கி வரும் கோவிஷீல்டு தடுப்பூசி மூன்றாவது கட்ட பரிசோதனையில் 90வீத பலன் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.