உலகிலேய கடுமையான ஊரடங்கு!! -தெற்கு ஆஸ்திரேலியாவில் அமுல்-

ஆசிரியர் - Editor III

ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் மாகாணத்தில் உள்ள மக்களிடையே கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருவதால் அங்கு பெரும் அச்சமான சுழல் நிலவத் தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில் உலகின் மிக கடுமையான ஊரடங்கு அங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் பள்ளிகள், பூங்காக்களில் உடற்பயிற்சி, பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வது, திருமணம், இறுதி ஊர்வலம் என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

மேலும்  முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு ஒருவர் மட்டும் வெளியில் சென்று அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


Radio