பாடசாலைகளை திறக்க கோரி போராட்டம்!! -வீதிக்கு இறங்கிய மாணவர்களும், பேற்றோர்களும்-

ஆசிரியர் - Editor III

அமெரிக்காவில் நியூ யார்க் நகரில் பாடசாலைகளை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்திப் பெற்றோர்களும் மாணவர்களும் வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக அமெரிக்காவில் அவ்வப்போது கல்வி நிறுவனங்கள் மூடப்படுகின்றன. அதன்படி நியூயார்க் நகரில் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, ஒன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என மேயர் அறிவித்தார்.

மேயரின் இந்த அறிவிப்புக்குப் பெற்றோர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மாணவ, மாணவிகளுடன் போராட்டங்களில் ஈடுபட்ட பெற்றோர், பாடசாலைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் மதுபானசாலைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

Radio