கால் மில்லியன் மக்களை கொன்ற கொரோனா!! -செவ்வதறியாது திகைக்கும் அமெரிக்க அரசு-

ஆசிரியர் - Editor III
கால் மில்லியன் மக்களை கொன்ற கொரோனா!! -செவ்வதறியாது திகைக்கும் அமெரிக்க அரசு-

அமெரிக்கா முழுவதும் உயிர் கொல்லி  கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் அங்கு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி கால் மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி அமெரிக்காவில் இன்று வியாழக்கிழமை வரைக்கும் 250,029 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தனர். குறிப்பாக 11.5 மில்லியன் பேர் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் வேறெந்த நாடுகளையும் விட அதிகளவான கொரோனா தொற்று நோயாளர்களும், அதிக கொரோனா மரணங்களும் அமெரிக்காவிலேயே பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Radio