அமைதிக்கான நோபல் பரிசு!! -உலக உணவுத்திட்ட அமைப்பின் தலைவருக்கு-
அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது என்று நோபல் பரிசினை வழங்கும் அமைப்பு அறிவிப்பு விடுத்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்காக, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி நோபல் பரிசு வழங்கும் விழா நடைபெறும்.
ஐரோப்பிய நாடான நோர்வே தலைநகர், ஓஸ்லோ நகரில் அமைதிக்கான பரிசும், ஸ்வீடன் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில், மற்ற 5 துறைகளுக்கான நோபல் பரிசும் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுத்திட்டம் என்கிற அமைப்புக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலக உணவுத் திட்ட அமைப்பின் தலைவர் டேவிட் பீஸ்லி அடுத்த மாதம் 10 ஆம் திகதி போஸ்லே நகருக்கு சென்று நேரில் நோபல் பரிசை பெற்றுக் கொள்ள இருந்தார்.
கொரோனா தொற்று காரணமாக ஓஸ்லோ நகரில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நார்வே நோபல் கமிட்டியின் இந்த கோரிக்கையை உலக உணவு திட்ட அமைப்பு ஏற்றுக்கொண்டது.
அதன்படி அடுத்த மாதம் 10 ஆம் திகதி ஓஸ்லோ நகரில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் விழாவில் உலக உணவுத்திட்ட அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்வில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரெசும் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.