SuperTopAds

பிரதமரின் 75 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு துருலிய லங்கா தேசிய மர நடுகை நிகழ்ச்சி திட்டம்

ஆசிரியர் - Editor IV
பிரதமரின் 75 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு துருலிய லங்கா தேசிய மர நடுகை நிகழ்ச்சி திட்டம்

பிரதமரின் 75 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும்   ஜனாதிபதியின் எண்ணக்கருக்கமைய வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம் துருலிய லங்கா தேசிய மர நடுகை நிகழ்ச்சி திட்டம்  நாடுபூராகவும்   நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று(19)  நாவிதன்வெளி  பிரதேச செயலக வளாகத்தில் பயன்தரு மரங்கள் நடும் நிகழ்வு  ஆரம்பித்து வைக்கப்பட்டது .

பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின் வழிகாட்டலில்  செயலக வளாகத்தில்  திணைக்கள பிரிவுகளின் உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் இப்பயன்தரு மரங்கள் நடப்பட்டன.சுமார் 35 க்கும் அதிகமான    பயன்தரு மரங்களை   ஒவ்வொரு  திணைக்கள பிரிவினரும் நட்டு வைத்தனர்.

இந்நிகழ்வில்  நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என். நவநீதராஜா,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.லதாகரன் , கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர்,  நிருவாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித்   , சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ் .சிவம் , உள்ளிட்ட  அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்

 மேலும் பிரதேச செயலக வளாகத்தில் துப்பரவு செய்யும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டது.