பொது இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் செல்லப்பிராணியை கொல்ல உத்தரவு!!
சீனாவில் உள்ள ஒரு மாகாணத்தில் செல்லப்பிராணியான நாயை மக்கள் பொது இடத்திற்கு அழைத்து செல்ல தடை விதித்துள்ளது. தடையை மீறி பொதுஇடங்களில் செல்லப்பிராணி சுற்றித்திரிந்தால் அவற்றை கொல்லவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் தற்போது அந்த வைரசின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவிலான பரிசோதனைகள், விமானபோக்குவரத்து தடை, ஊரடங்கு என பல்வேறு வழிமுறைகள் மூலம் கொரோனா பரவல் அந்நாட்டில் கட்டுப்பட்டுக்குள் வந்துள்ளது.
மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போதும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் நடைபயணத்தின்போது செல்லப்பிராணியான நாயை உடன் அழைத்து செல்லும் அதன் உரிமையாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு 78 சதவீதம் உள்ளதாக அதிர்ச்சி முடிவுகள் வெளியானது.
இந்த தகவல் வெளியாவதற்கு முன்னதாகவே சீனாவின் யுன்யன் என்ற மாகாணத்தில் உள்ள விஜிங்இன் என்ற நகராட்சி கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதில் விஜிங்இன் நகர மக்கள் தங்கள் செல்லப்பிராணியான நாயை வீட்டை விட்டு பொது இடங்களுக்கு அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்பு வாசிகள் தங்கள் செல்லப்பிராணியான நாயை தங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒரு வேளை விஜிங்இன் நகரவாசிகள் தங்கள் செல்லப்பிராணியான நாயை தடையை மீறி பொது இடங்களுக்கு அழைத்து சென்றாலோ, அல்லது செல்லப்பிராணி நாயை வீட்டில் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்காமல் பொதுஇடங்களில் சுற்ற அனுமதித்தாலோ உரிமையாளர்களுக்கு முதல் முறை போலீசார் எச்சரிக்கை விடுப்பார்கள்.
அதே தவறு 2 ஆவது முறை நடைபெற்றால் செல்லப்பிராணியின் உரிமையாளருக்கு 200 யூவான் (23 யூரோ) அபராதம் விதிக்கப்பட்டும்.
ஆனால், 3 ஆவது முறையாக அதே செல்லப்பிராணியான நாயை அதன் உரிமையாளர் பொதுவெளியில் சுற்றித்திரிய அனுமதித்தாலோ அல்லது உரிமையாளருக்கு தெரியாமல் பொதுவெளியில் திரிந்தாலோ அந்த செல்லப்பிராணிகளை கொல்ல போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.