SuperTopAds

கொரோனாக்கு முற்றுப்புள்ளியா? பரீட்சார்த்த தடுப்பூசி விநியோகத் திட்டம் ஆரம்பம்!!

ஆசிரியர் - Editor III
கொரோனாக்கு முற்றுப்புள்ளியா? பரீட்சார்த்த தடுப்பூசி விநியோகத் திட்டம் ஆரம்பம்!!

அமெரிக்கா நாட்டில் உள்ள பைசர் மருந்தாக்க நிறுவனத்தின் இறுதிக்கட்ட சோதனையில் 90 வீதம் சாதகமான விளைவுகளை வெளிப்படுத்திய கோவிட்-19 தடுப்பூசியின் பரீட்சார்த்த விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரோட் தீவு, டெக்சாஸ், நியூ மெக்ஸிகோ மற்றும் டென்னசி மாகாணங்களுக்கு சோதனை முயற்சி அடிப்படையில் பைசர் தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

பைசர் கொரோனா தடுப்பு மருந்தை -70 டிகிரி செல்சியஸ் மிகக் குறைந்த வெப்பநிலையில் சேமிக்க வேண்டிய நிலை உள்ளதால் விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டது. 

ஆரம்ப தரவுகளின் அடிப்படையில் கொரோனா தொற்று நோயைத் தடுப்பதில் பைசர் தடுப்பூசி 90 வீதத்துக்கும் அதிகமான செயல்திறனை கொண்டதாகக் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்டுவரும் இந்தத் தடுப்பூசி அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் என பைசர் நிறுவனம் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மூன்றாம் வாரத்திற்குள் பைசர் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க முன்னர் இறுதிக் கட்ட ஆய்வுகளில் போதுமான பாதுகாப்பு செயல் திறனை எதிர்பார்ப்பதாக மருந்தாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

பைசர் மற்றும் அதன் கூட்டு நிறுவனமாக பயோ என்டெக் அமெரிக்க அரசாங்கத்திற்கு 100 மில்லியன் சொட்டு தடுப்பூசியை வழங்க 1.95 பில்லியன் டொலருக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனைவிட மேலும் 500 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற அமெரிக்க அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.