சபரிமலையில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!!
சபரிமலை ஜய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை எதிர்வரும் 26 ஆம் திகதியும், மகர விளக்கு பூஜை 2021 ஜனவரி 14 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
நேற்று அதிகாலை 5 மணிக்கு புதிய மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து, பக்தர்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் ஜயப்பம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இணையத்தளம் ஊடாக முற்பதிவு செய்து வந்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதிலும் நேற்று ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பம்பை ஆற்றில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக பம்பை திருவேணியில் சிறப்பு குளியல் அறைகள் கட்டப்பட்டிருந்தன.
இணையத்தளத்தில் முற்பதிவு செய்தவர்கள் தரிசனத்திற்கும் 24 மணி நேரத்திற்குள் முன் பெறப்பட்ட கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழுடன் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சான்றிதழ்களுடன் வந்தவர்களிடம் இருந்த சான்றிதழ்கள் நிலக்கல்லில் பரிசோதிக்கப்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து சென்றவர்கள் மருத்துவ பரிசோதனை எடுத்து 24 மணி நேரம் கடந்திருந்தால், அவர்களுக்கு தனியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.