கொரோனாவில் இருந்து மெல்ல விடுபடும் இந்தியா!! -குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு-
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முழுமையாக குணமடைந்து அங்கிருந்து வெளியேறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 82 இலட்சத்தை கடந்துள்ளது.
இதன்படி மொத்தமாக 82 இலட்சத்து 47 ஆயிரத்து 950 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 4 இலட்சத்து 67 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை புதிதாக 30 ஆயிரத்து 715 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 88 இலட்சத்து 45 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 435 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 30 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.