SuperTopAds

பாலத்தை உடைத்து நீரோடையில் பாய்ந்த வாகனம்!! -7 பேர் பலி-

ஆசிரியர் - Editor III
பாலத்தை உடைத்து நீரோடையில் பாய்ந்த வாகனம்!! -7 பேர் பலி-

இமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி மாவட்டம் புல்கிராட் அருகே சென்று கொண்டிருந்த ஒரு வாகனம், இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென நிலை தடுமாறி பாலத்தை உடைத்துக்கொண்டு பாறைகள் நிறைந்த நீரோடையில் பாய்ந்துள்ளது. 

பாறைகள் நிறைந்திருந்த நீரோடையில்  வாகனம் விழுந்ததால் பலத்த சேதமடைந்தது. வாகனத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு பாறைகள் மீது விழுந்தனர். 

விபத்து பற்றி தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார். விபத்து குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மழை பெய்துகொண்டிருந்ததால் பிரேக் சரியாக பிடிக்காததால் குறித்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.