பீகாரின் முதலமைச்சராக நிதிச்குமார்!! -நாளை பதவியேற்கிறார்-

ஆசிரியர் - Editor III
பீகாரின் முதலமைச்சராக நிதிச்குமார்!! -நாளை பதவியேற்கிறார்-

இந்தியாவின் பீகார் மாநில முதல் அமைச்சராக தொடர்ந்து 4 ஆவது முறையாக நிதிச் குமார் நாளை திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார்.

பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. 

இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில் தற்போதைய சட்டசபையை கலைக்க கவர்னருக்கு சிபாரிசு செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. 

அதையடுத்து, கவர்னர் பாகு சவுகானை நிதிச்குமார் சந்தித்து தனது மந்திரி சபையின் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். மேலும், சட்டசபையை கலைக்கக் கோரும் சிபாரிசை அளித்தார். 

நிதிச்குமாரின் ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார். புதிய அரசு பதவி ஏற்கும்வரை இடைக்கால முதல் மந்திரியாக நீடிக்குமாறு நிதிச்குமாரை கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் நிதிச்குமார் இல்லத்தில்,   பா.ஜ.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதிச் குமார்  தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  

தொடர்ந்து, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க நிதிச் குமார் உரிமை கோரினார்.  இதையடுத்து, பீகார் முதல் மந்திரியாக 7 ஆவது முறையாகவும், தொடர்ந்து 4 ஆவது முறையாகவும் நிதிச் குமார் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.