ட்ரம்ப் ஆதரவாளர்களின் பேரணியில் வன்முறை!! -ஒருவருக்கு கத்தி குத்து: பலர் காயம்-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்து வொசிங்டனில் அவரது ஆதரவாளர்கள் பல ஆயிரக்கணக்கானோர் திரண்டு மெகா மார்ச் என்ற பெயரில் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.
இந்தப் பேரணியில் ட்ரம்ப் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்கள் மோதிக்கொண்டதில் பலர் காயமடைந்தனர். ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகிக் படுகாயமடைந்தார்.
வன்முறைகளில் ஈடுபட்ட 20 பேர் வரை இதுவரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தனது தோல்வியை; ட்ரம்ப் இதுவைரை ஏற்கவில்லை. தேர்தலில் மோசடி நடந்ததாகவும், தங்களிடம் இருந்து வெற்றியை ஜோ பைடன் திருடிவிட்டதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.
இந்நிலையில் மெகா மார்ச் என்ற பெயரில் வெசிங்டனில் நேற்று சனிக்கிழமை பல ஆயிரக்கணக்காண ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி பேரணியில் ஈடுபட்டனர். தேர்தல் முடிவுகளுக்கு எதிராகக் கோசங்களை எழுப்பியனர்.
இதன்போதே ட்ரம்ப் அதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.