SuperTopAds

சபரிமலை கோவில் மீண்டும் திறக்கப்பட்டு ஜயப்பகுக்கு அபிசேகம்!! -பக்கதர்களுக்கு அனுமதி இல்லை-

ஆசிரியர் - Editor III
சபரிமலை கோவில் மீண்டும் திறக்கப்பட்டு ஜயப்பகுக்கு அபிசேகம்!! -பக்கதர்களுக்கு அனுமதி இல்லை-

சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.

நேற்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு கோவில் நடை அபிசேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பின் இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். இதன்போது பக்தர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மகரவிளக்கு பூஜையை ஒட்டி கோவில் நடை மீண்டும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படும். மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்.

தொடர்ந்து 2020-2021 ஆண்டுகளுக்கான புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு சடங்கு நடைபெறும். அன்றைய தினம் சபரிமலை தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்கள். தொடர்ந்து அதிகாலை முதல் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.