SuperTopAds

ஜோ பைடன் பக்கம் சாயும் ட்ரம்பின் கட்சி எம்.பிக்கள்!! -கடுப்பில் ட்ரம்-

ஆசிரியர் - Editor III
ஜோ பைடன் பக்கம் சாயும் ட்ரம்பின் கட்சி எம்.பிக்கள்!! -கடுப்பில் ட்ரம்-

அமெரிக்க ஜனாதிபதியாக விரைவில் பதவியேற்கவுள்ள ஜோ பைடனுடன் உளவுத் தகவல் குறிப்புக்களை பகிர்ந்துகொள்ள ட்ரம்ப் தலைமையிலான குடியரசு கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவு எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தலில் ஒருவர் வெற்றி பெற்றால் அவர் பதவியேற்க முன்னரே உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வது வழமையாகும்.

எனினும் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளை ஏற்க தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

எனினும் டொனாலட் ட்ரம்ப்ன் நெருங்கிய நண்பரும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான லிண்ட்ஸே கிரஹாம் வழக்கமான நடைமுறைப்படி பைடனுக்கு உளவுத் தகவல் குறிப்புக்களை அனுப்புவதில் தவறில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள ட்ரம்ப் மறுத்து வருவது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

ட்ரம்பும் குடியரசு கட்சியினரும் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்பின் பிடிவாதம் தொடர்ந்து வரும் நிலையில் அவரது சகாக்களான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பல எம்.பிக்கள் பலர் பைடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதிய ஆட்சி பொறுப்பேற்க ட்ரம்ப் ஒத்துழைப்பே சரியானதாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.