SuperTopAds

தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கவேண்டாம்..! இந்தியா விடாப்பிடி, பிரிட்டனிடம் கோரிக்கையும் முன்வைப்பு..

ஆசிரியர் - Editor I

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் இருந்து நீக்கவேண்டாம். என இந்தியா பிரிட்டனிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

2000 ஆம் ஆண்டளவில் பிரிட்டன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்த்தது.எனினும் யுத்தம் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் 

இலங்கையில் எந்த விதமான வன்முறைகளும் இடம்பெறாததையடுத்தும் புலிகள் அமைப்பின் தடையை நீக்க வேண்டும் என்ற கோரப்பட்டது. 

இந்த நிலையிலேயே புலிகள் மீதான தடையை பிரிட்டன் நீக்கவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சும் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தது. 

இவ்வாறான சூழலில் புலிகள் மீதான தடையை பிரிட்டன் நீக்கக்கூடாதென இந்தியா. பிரிட்டிஷ் உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் 

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் ஜனாதிபதி ஆர் . பிரேமதாஸா ஆகியோரின் படுகொலைகளுக்க புலிகளே காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.