SuperTopAds

கருவளையத்தை நீக்க நல்ல பாம்பை முகத்தில் தேய்த்து நூதன சிகிச்சை!! -தெறித்து ஓடும் இளைஞர், யுவதிகள்-

ஆசிரியர் - Editor III
கருவளையத்தை நீக்க நல்ல பாம்பை முகத்தில் தேய்த்து நூதன சிகிச்சை!! -தெறித்து ஓடும் இளைஞர், யுவதிகள்-

திருபுவனை பகுதியில் முகத்தில் உள்ள கருவளையத்தை நீக்குவதாக நல்ல பாம்பை முகத்தில் தேய்த்து மரண பயத்தை ஏற்படுத்தும் சிகிச்சை நடைபெற்று வருகின்றது. 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ் புதூரை சேர்ந்த குமரேசன் என்ற பாம்பாட்டி திருபுவனையில் முகாமிட்டு அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று மக்களின் பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ‘முகத்தில் இருக்கும் கருவளையத்தை நீக்க வேண்டுமா? தன்னிடம் உள்ள விஷப்பாம்பை வைத்து முகத்தில் தேய்த்தால் போதும். அவை இருந்த இடம் இல்லாமல் போய் விடும்’ என்று ஆசை வார்த்தை கூறி இந்த நூதன சிகிச்சை பெற அழைத்துள்ளார்.

இதை நம்பி பலரும் இந்த சிகிச்சை பெற முன்வந்தனர். அந்த பாம்பாட்டி 100 ரூபாயை வாங்கிக் கொண்டு அதிக விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பை கையில் சுற்றி கருவளையத்தை நீக்குவதாக அவர்களது முகத்தில் தேய்த்தார். 

அப்போது பலர் பயந்து நடுங்கியபடியே இந்த சிகிச்சையை மேற்கொண்டனர். இளைஞர்கள் பலர் பயந்து ஓடியதையும் காண முடிந்தது.