அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் அதிரடி நீக்கம்!! -டிரம்ப் எடுத்த திடீர் நடவடிக்கை-
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி வகித்து வந்த மார்க் எஸ்பர், அப்பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் ஜனாதிபதி டிரம்ப்.
அவருக்கு பதிலாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் மில்லர் அப்பதவிக்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஜனாதிபதி டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் கூறுகையில், மார்க் எஸ்பர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் மில்லர் அந்த பதவிக்கு நியமிக்கப்படுகிறார். அவர் பாதுகாப்பு துறையின் பொறுப்பு அமைச்சராக உடனடியாக பதவி ஏற்கிறார். எஸ்பரின் பணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.