SuperTopAds

ஜனாதிபதியாக இருந்து கொண்டே தொற்ற 11 ஆவது நபராக டொனால்ட் ட்ரம்ம்!!

ஆசிரியர் - Editor III
ஜனாதிபதியாக இருந்து கொண்டே தொற்ற 11 ஆவது நபராக டொனால்ட் ட்ரம்ம்!!

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியில் இருந்து கொண்டே நடந்த மற்றுமொரு தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த 11 ஆவது நபராக டொனால்ட் ட்ரம்ப் இடம்பெற்றுள்ளார்.

முதன் முதலாக 1791-1801 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்த ஜான் ஆடம்ஸ், தோமஸ் ஜெபர்சனிடம் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.

1791-1801 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதியாக இருந்த ஜோன் ஆடம்ஸ், தோமஸ் ஜெபர்சனிடம் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். 1825- 1829 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதியாக இருந்த ஜான் குயின்ஸி ஆடம்ஸ், ஆன்ட்ரூ ஜாக்ஸனிடம் தோல்வி அடைந்து பதவி இழந்தார்.

1837 - 1841 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த மார்ட்டின் வான் புரென், வில்லியம் ஹென்றி ஹாரிஸனிடம் தோல்வி அடைந்தார். 1885 - 1889 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதியாக இருந்த குரோவர் க்ளிவ்லாந்த், பெஞ்சமின் ஹாரிஸனிடம் தோற்று வெளியேறினார்.

1889-1893 ஆம் ஆண்டுகளில் மட்டுமே ஜனாதிபதியாக இருந்த பெஞ்சமின் ஹாரிஸன், குரோவர் கிளிவ்லாந்திடம் தோல்வி அடைந்தார். 1909 -1913 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதியாக இருந்த வில்லியம் ஹெச் டாப்ட், உட்ரோ வில்ஸனிடம் தோல்வி அடைந்தார்.

1929- 1933 ஆம் ஆண்டுகளில் பதவியில் இருந்த ஹெர்பர்ட் ஹூவர், பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டிடம் தோல்வி அடைந்தார். 1974- 1977 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதியாக இருந்த ஜெரால்ட் ஃபோர்ட், ஜிம்மி கார்ட்டரிடம் தோல்வி அடைந்தார். 

1977- 1981 ஆம் ஆண்டு வரையாக ஜனாதிபதியாக இருந்த ஜிம்மி கார்ட்டர், ரொனால்ட் ரீகனிடம் தோல்வி அடைந்தார். 989- 1993 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஷ், பில் கிளிண்டனிடம் தோல்வி அடைந்தார்.

2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஜனாதிபதியாக இருந்துவரும் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.