ஜோ பைடன் ஆட்சி பொறுபேற்ற உடன் 1.10 கேடி பேருக்கு குடியுரிமை!!
ஜோ பிடன் ஜனாதிபதியாக தெரிவாகி ஆட்சி அமைத்த உடன் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படுவது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி மாதம் பொறுப்பேற்கிறார்.
இந்நிலையில் ஜோ பைடன் ஆட்சி பொறுப்பேற்ற உடன் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். இதுவே அவரது முதல் கையெழுத்தாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதன்படி அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் 1.10 கோடி புலம் பெயர்ந்த மக்களுக்குக் குடியுரிமை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் 5 இலட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதன்மூலம் ஆண்டுதோறும் 95,000 என்ற எண்ணிக்கையில் குடியுரிமை அளித்து உரிய ஆவணங்களுடன் அமெரிக்காவின் குடிமக்களாக மாற்றப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.