மற்றொரு உலகப் போர் விரைவில்!! -எச்சரிக்கும் பிரிட்டனின் ஆயுதப் படைகளின் தலைவர்-
கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உலகில் நிலவிவரும் நிச்சயமற்ற தன்மை மற்றும் பதட்டம் மற்றொரு உலகப் போருக்கு வித்திடக்கூடும் என பிரிட்டனின் ஆயுதப்படைகளின் தலைவர் நிக் கார்ட்டர் எச்சரிக்கை செய்துள்ளார்.
யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பிரிட்டனில் வருடம் தோரும் நவம்பர் 8 ஆம் திகதி நினைவு கூரப்படுகின்றனர்.
இந்த நினைவு நாளை ஒட்டி ஊடகம் ஓன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மற்றொரு உலகப் போருக்கான சாத்தியம் குறித்த எச்சரிக்கையை விடுத்தார்.
அந்த செவ்வியில் அவர் மேலும் குறிப்பிடுகையில் -
பிராந்திய பதட்டங்கள் அதிகரிப்பது மற்றும் தவறான முடிவுகள் இறுதியில் பரவலான மோதலுக்கு வழிவகுக்கும். உலகம் மிகவும் நிச்சயமற்ற ஒரு தருணத்தில் உள்ளது. மிகவும் மோசமான ஒரு காலகட்டத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்த நேரத்தில் நிலவும் பிராந்திய மோதல்கள் தவறான கணிப்பீடுகளுக்கு வழிவகுக்கும். மற்றொரு உலகப் போருக்கான உண்மையான அச்சுறுத்தல் இருக்கிறதா? எனக் கேட்டபோது, அதற்கான ஆபத்து உள்ளது. இது குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
கடந்த கால தவறுகளை மீண்டும் செய்ய நினைப்பவர்கள் நடந்து முடிந்த யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புக்களை நினைவில் கொள்வது முக்கியம் என்றார்.