தன்னை வளர்க்க தாய் பட்ட சஸ்டங்களை நினைவுகூர்ந்த கமலா ஹரிஸ்!! -கண்கலங்க வைத்த முதலாவது உரை-
அமெரிக்க மக்கள் ஒற்றுமையை, கண்ணியத்தை, அறிவியலை, உண்மையை நிலைநாட்டவே பைடனை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளார்கள் என்று அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள முதல் ஆசிய-அமெரிக்கரான கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
டெலாவேரின் -வில்மிங்டனில் உள்ள ஜனநாயகக் கட்சியின் பிரச்சார தலைமையகத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போதே கமலா ஹரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -
தனியொரு ஆளாக என் அம்மா என்னை வளர்த்தெடுத்தார். அவரை நான் இந்த தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன். இந்த தருணத்தை சாத்தியப்படுத்திய கருப்பின மக்களை, ஆசியர்களை, வெள்ளை இனத்தவர்களை, லத்தீனியர்களை நான் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன் என அவர் தன் உரையில் குறிப்பிட்டார்.
இந்த மக்கள்தான் ஜனநாயகத்தின் முதுகெலும்பு. நூறு ஆண்டுகளுக்கு முன்பு 19 ஆவது சட்டத்திருத்தத்திற்காகப் போராடியவர்கள் அவர்கள். 55 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குரிமைக்காகப் போராடியவர்கள் அவர்கள். 2020 இல் புதிய தலைமுறை பெண்களாக தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளார்கள்.
இந்த போராட்டத்தின், இலக்கின் வெளிப்பாடாக இப்போது துணை ஜனாதிபதி என்ற இடத்தக்குத் தெரிவாகியுள்ளேன். துணை ஜனாதிபதியாக ஒரு பெண்ணை தேர்ந்து எடுத்ததற்காக பைடனை கமலா ஹாரிஸ் பாராட்டினார்.
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகப் பதவி ஏற்கும் முதல் பெண்ணாக நான் இருக்கலாம். நான் கடைசி பெண் அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.