அமொிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோசப் ரொபின் பைடன் தேர்வு..! துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸ்.. ஜனவரி 21ல் பதவியேற்பு..
அமொிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோசப் ரொபின் பைடன் ஜேஆர் வெற்றி பெற்றிருக்கின்றார். இதன்படி 2021ம் ஆண்டு ஜனவரி 21ம் திகதி அமெரிக்கவின் 46வது ஜனாதிபதியாக பைடன் பதவியேற்கவுள்ளார்.
இதுவரையான முடிவுகளின்படி பைடன் 284 இடங்களிலும் டொனால்ட் ட்ரம்ப் 214 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஜனாதிபதியாக வெற்றி பெற 270 இடங்களை வெற்றி கொண்டாலே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தானே வெற்றி என்று தெரிவித்து, பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்த நிலையில் பைடன் வரலாற்று பெற்றியை பெற்றுள்ளார்.
இதேவேளை அமொிக்காவின் பிரதி ஜனாதிபதியாக இந்திய வம்சாவழி அமொிக்கரான கமலா ஹரிஸ் பதவியேற்றிருக்கின்றார்.