நிதி நிறுவனம், பிரமிட் வியாபாரம் என மக்கள் பணத்தை ஏப்பம்விட்ட கும்பலே யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் சென்றபோது கைது..! பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு..
யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் தமிழகம் வேதாரண்யம் கோடிக்கரைக்குள் நுழைந்த நிலையில் தமிழக கடலோர காவல் படையினால் கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 போில் கணவன் இலங்கையில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி மோசடியில் ஈடுபட்டவர் என தொியவந்திருக்கின்றது.
வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் இலங்கை யாழ்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் ஒரு பைப்பர் படகில் திரிகோணமலை பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி வயது 45 அவரது மனைவி சல்மா வேகம் வயசு 35 இவர்களது மகன் அன்சார் வயசு 10 என்ற 3 பேரும் தமிழகம் கோடிக்கரைக்குள் நுழைந்துள்ளனர்.
இந்நிலையில் 3 பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் படையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் அண்மைக் காலமாக கிழக்கு மாகாணத்தில் நிதி நிறுவனம் ஒன்று நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்து தலைமறைவான நிலையில் பல்வேறு பிரதேசங்களில் நீதிமன்றங்களில் இவருக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 06 வருடங்களாக கிழக்கு மாகாணம் அடங்கலாக நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனம் மற்றும் பிரமிட் வியாபாரம் என கிழக்கின் முக்கிய நகரங்களில் குறிப்பாக கல்முனை, மருதமுனை, சம்மாந்துறை, பொத்துவில் உள்ளிட்ட பிரதேசங்களிலும்,
நாடு முழுவதிலும் பல நுாறுகோடி ரூபாய் பணம் மோசடி செய்துள்ளதாக தொியவருகின்றது.