SuperTopAds

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் தொடரும் இழுபறி!! -முடிவுகள் மேலும் தாமதமாகும்-

ஆசிரியர் - Editor III
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் தொடரும் இழுபறி!! -முடிவுகள் மேலும் தாமதமாகும்-

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து மூன்று நாட்களான பின்னரும் இன்னமும் வாக்கு எண்ணிக்கை முடியவில்லை. இதனால் தேர்தல் முடிவு தாமதமாகி கொண்டிருக்கின்றது. வெள்ளை மாளிகையை பொறுத்தவரை எவ்வித நிச்சயமற்ற நிலைமை தான் காணப்படுகின்றது.

இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில் தேர்தல் அவையில் ஜனாதிபதியாக பொறுப்பேற்க தேவையான 270இடங்களை யாரும் பெறவில்லை. 264இடங்களை பெற்றிருக்கும் ஜோ பிடன், முழு வெற்றி பெற்று வெள்ளை மாளிகையை கைப்பற்றுவாரா என்பதை அறிய மேலும் சில நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கலாம்.

வடக்கு கரோலினாவிலும் இன்னும் இலட்சக்கணக்கில் வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ள நிலையில் முடிவுகள் வெளிவருவது தாமதமாகும் என கருதப்படுகிறது. ஏற்கனவே இந்த மாகாணத்தில் தாம் வெற்றி பெற்று விட்டதாக புதன்கிழமை ட்ரம்ப் அறிவித்து குழப்பத்தை ஏற்படுத்தினார்.

இன்னமும் ஏராளமான வாக்குகள் எண்ண வேண்டிய நிலையில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை விரைவில் அறிவித்து விட முடியாத நிலை நிலவுகிறது.

இதனிடையே நெவாடாவில் எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் வாக்கு எண்ணிக்கை கணக்கிட்டு முடியாதென கிளார்க் கவுன்ட்டி பதிவாளர் ஜோ கிளாரியா அறிவித்துள்ளார்.

சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை தான் பெருமளவான மின்னஞ்சல் வந்தடையுமென எதிர்பார்க்கின்றோம். அவற்றையும் எண்ணி  முடித்த பின்னரே முடிவுகள் தெரிய வரும் என கிளாரியா குறிப்பிட்டுள்ளார்.