SuperTopAds

டிரம்பின் நேரலையை இடைநடுவில் நிறுத்திய அமெரிக்க ஊடகங்கள்!! -பொய் கூறியதாலேயே நிறுத்தியதாக தெரிவித்ததால் பரபரப்பு-

ஆசிரியர் - Editor III
டிரம்பின் நேரலையை இடைநடுவில் நிறுத்திய அமெரிக்க ஊடகங்கள்!! -பொய் கூறியதாலேயே நிறுத்தியதாக தெரிவித்ததால் பரபரப்பு-

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப் உரையாற்றியபோது, பல்வேறு அமெரிக்க ஊடகங்கள் நேரலை ஒளிபரப்பை திடீரென நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னரும், வெற்றிபெற்றவர்கள் தொடர்பிலான இறுதி அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக டிரம்ப் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்தார். இதனை அனைத்து ஊடகங்களும் நேரலையாக ஒளிபரப்பு செய்தன.  

பேட்டியின் போது பேசிய டிரம்ப், ஜனநாயக கட்சியினர் சட்டவிரோத வாக்குகளை பயன்படுத்தி தேர்தல் வெற்றியை எங்களிடம் இருந்து திருட முயற்சிக்கிறார்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சுமார் 17 நிமிடங்கள் தொடர்ந்து பேசிய டிரம்ப், திரும்பத் திரும்ப எதிர்க்கட்சி மீது குற்றச்சாட்டை கூறினார். 

இதனால் அதிருப்தி அடைந்த பல்வேறு அமெரிக்க ஊடகங்கள் நேரலையை இடை நடுவில் நிறுத்தியுள்ளன. டிரம்ப் தவறான தகல்களை பரப்புவதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை அவர் சுமத்துவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.