SuperTopAds

நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவில் இணைக்கப்பட்டுள்ள பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வழங்கும் வேலைத்திட்டம்

ஆசிரியர் - Editor IV
நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவில் இணைக்கப்பட்டுள்ள பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வழங்கும் வேலைத்திட்டம்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கும் கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தினால் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவில் இணைக்கப்பட்டுள்ள பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வழங்கும் வேலைத்திட்டம்  இன்று தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டது.

வறுமை இல்லாத இலங்கைையை உருவாக்குதல் எனும் குறிக்கோளின் அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த குறைந்த கல்வி தகைைமையுடையவர்களுக்கு அரச தொழிலை பெற்றுக் கொடுத்து வறுமையை குறைக்கும் நோக்குடன் வழங்கப்பட்ட நியமனங்கைளை பெற்றுக் கொண்டவர்களுக்கு இப்பயிற்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது

இதன்போது தெரிவு செய்யப்பட்ட பயிற்சியாளர்கள் 06 மாதத்திற்கு இடம்பெறவுள்ள பயிற்சிக்காக தத்தமது தகைமைக்கு ஏற்ற தொழில் துறைகளை தெரிவு செய்வதற்கான வேலைத் திட்டமும் முன்னெடுக்கப்பட்டது

இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர் நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன் நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித் பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் பிரதேச இணைப்பாளர் எம்.ஐ.எம்.பாரிஸ் தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையின் நாவிதன்வெளி பிரதேச இணைப்பாளர் எம்.ஷாஜகான்உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்