இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தில் முதுதத்துவமாணி மற்றும் கலாநிதி பட்டக் கற்கை நெறிகள் ஆரம்பம்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நான்காவது பீடமாக ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப்பீடமானது இஸ்லாமிய கற்கைகள் துறையில் முதுதத்துவமாணி மற்றும் கலாநிதி பட்டங்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது (ஆய்வு வழியாக).
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களின் சீரிய வழிகாட்டலின் கீழ் , இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீட பீடாதிபதி அஷ்ஷெய்க் கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் அவர்களின் கடின முயற்சியின் பலனாகவும், துறைத் தலைவர்கள் மறறும் சிரேஷ்ட விரிவுரையாளர்களின் பங்குபற்றுதலுடனும் இக்கற்கை நெறிகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக குறித்த பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷெய்க் கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் அவர்களின் அர்ப்பணிப்புடனான உழைப்பின் பலனாக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடமானது பல முக்கிய மைல்கற்களை அடைந்துள்ளமை குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். தொடர்ச்சியாக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழித்துறை தொடர்பான சர்வதேச ஆய்வு மாநாடுகளை வருடாவருடம் சிறப்பாக நடாத்தி வருவதோடு மாணவர்களை ஆய்வுத்துறையில் ஈடுபடுத்தும் நோக்கில் சமூக ஆய்வுகளுக்கான மாணவர் ஆய்வு மன்றம் ஒன்றை நிறுவி அதன் வழியாக பல சிறந்த ஆய்வாளர்கள் உதயமாகியுள்ளமை கவனிக்கத்தக்கது.
அத்தோடு இலங்கையில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிக்கென்று முதலாவதும் ஒரேயொரு ஆய்வு சஞ்சிகையுமான Sri Lankan Journal of Arabic and Islamic Studies என்ற இணையவழி ஆய்வு சஞ்சிகையை ஆரம்பித்து சிறந்த பல ஆய்வுக் கட்டுரைகள் வெளிவர ஏதுவாக இருந்து வருகிறார்.
அந்த வரிசையில்தான் இஸ்லாமிய கற்கைகள் துறையில் முதுதத்துவமாணி (ஆய்வு வழி) மற்றும் கலாநிதிப் (ஆய்வு வழி) பட்டங்கள் ஆரம்பமாகவுள்ளன. இது தொடர்பான மேலதிக விடயங்களை அறிய http://www.seu.ac.lk/fia/pgia.php எனும் இணையத்தளத்தையும், விண்ணப்பப்படிவங்களை பதிவிறக்கம் செய்ய http://www.seu.ac.lk/fia/downloads.php எனும் இணையத்தளத்தையும் தரிசிக்க முடியும்.
மேலதிக விபரங்களை அறிய இணைப்பாளரை தொடர்பு கொள்ள முடியும்.
Program Coordinator (MPhil/Ph.D.)
Faculty of Islamic Studies and Arabic Language,
South Eastern University of Sri Lanka,
Email: smmnafees@seu.ac.lk
Tel: +94 779523489