அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்!! -முதல் முடிவிலே பிடன் வெற்றி-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முதல் வாக்குப்பதிவு அமெரிக்காகனடா எல்லைக்கிராமமான நியு ஹாம்ப்ஷயரில் நள்ளிரவு ஆரம்பமாகி நடைபெற்று அதன் முடிவு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு பதிவான மொத்தம் 5வாக்குகளில் அனைத்து பிடனுக்கே அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வெளியான முதல் தேர்தல் முடிவில் பிடன் வெற்றிபெற்றுள்ளார்.
அமெரிக்கா-கனடா எல்லையில் உள்ள நியு ஹாம்ப்ஷயரில் இருக்கும் டிக்ஸ்வில்லி நோட்ச் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வழக்கமான முறைப்படி நள்ளிரவில் முதலாவதாக வாக்குப்பதிவானது.
நள்ளிரவில் வாக்களிக்கும் பாரம்பரியம் இங்கு சுமார் 60ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.இதேபோல் மில்ஸிபீல்ட் எனுமிடத்திலும் நள்ளிரவில் வாக்குகள் பதிவாகின. இதில் ட்ரம்புக்கு 16 வாக்குகளும், ஜோ பிடனுக்கு 5வாக்குகளும் கிடைத்துள்ளன.
இதேவேளை,ஹார்ட்ஸ் லோகேசன் எனுமிடத்திலும் வழக்கமாக நள்ளிரவில் வாக்குப்பதிவு நடைபெறும். ஆனால் இந்த முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அங்கு நள்ளிரவு வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அங்குள்ள 48 பேரும் பிற பகுதிகளில் நடைபெறுவதை போல பகல் நேரத்தில் வாக்குகளை பதிவு செய்யவுள்ளனர்.