அம்பாறையில் மழைவீழ்ச்சி மற்றும் இடிமின்னல் காரணமாக மதில் உடைந்து விழுந்துள்ளது-இருவர் பலி

ஆசிரியர் - Editor IV
அம்பாறையில் மழைவீழ்ச்சி மற்றும் இடிமின்னல் காரணமாக மதில் உடைந்து விழுந்துள்ளது-இருவர் பலி

அதிக  மழைவீழ்ச்சி மற்றும் இடிமின்னல் காரணமாக  மதில்  உடைந்து விழுந்துள்ளது.

அம்பாறை மாவட்டம்   கல்முனை பன்சாலை வீதியில்  உள்ள மதில் இவ்வாறு வெள்ளிக்கிழமை(30) இரவு உடைந்துள்ளது.

இவ்வாறு உடைந்துள்ள மதிலின் சேதங்களினால் போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதே வேளை கல்முனை கிறின்பீல்ட் தொடர்மாடி குடியிருப்பிலும் இடி மின்னல் காரணமாக தீப்பரவல் ஒன்று ஏற்பட்டதுடன் இதனால் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை மாநகர தீயணைப்பு பிரிவு பரவியிருந்த தீயினை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்திருந்தது.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய இடி மின்னலில் திருக்கோவில் பிரதேச விநாயகபுரத்தை சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று(30) வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.

விநாயகபுரம் தபாலக வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா (வயது 46) ஆகிய தம்பதிகளே இவ்விதம் மின்னல்தாக்கி பரிதாபகரமாக பலியானவர்களாவார்.

இவர்கள் விவசாயிகளாவர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகளுண்டு. சடலம் திருக்கோவில் ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.மாலை 6 மணிமுதல் மாவட்டமெங்கும் பாரிய இடி மின்னலுடன் கனமழை பொழிந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு