21 அடி நீளமான இறக்கைகள் கொண்ட இராட்சத பறவை கண்டுபிடிப்பு!! -ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்-
21 அடிக்கும் அதிகமான நீளம் கொண்ட இறக்கைகள் மற்றும் ஹாக்ஸா போன்ற பற்கள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய இராட்சத பறவைகள் எது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
21 அடி வரை இறக்கைகள் மற்றும் ஹாக்ஸா போன்ற பற்கள் கொண்ட பிரம்மாண்டமான பறவைகள் பூமியின் தெற்கு பெருங்கடல்களில் சுற்றித் திரிந்தன என்று கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த வாரத்தில் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பல்லுயிரியலாளர்கள் குழு வரலாற்றில் மிகப் பெரிய பறவை இனங்கள் எதுவாக இருந்திருக்கலாம் என்பதைக் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டு உள்ளது.
1980 ஆம் ஆண்டில் அண்டார்டிகாவின் சீமோர் தீவில் மீட்கப்பட்ட புதைபடிவங்கள் பெலகோர்னிதிட்கள் என அழைக்கபடும் பறவையின் புதைபடிவங்கள் அவை என அடையாளம் காணப்பட்டன. இரண்டு பறவைகளுக்கு சொந்தமான கால் எலும்பு மற்றும் பகுதி தாடை எலும்பு அடங்கிய புதைபடிவங்கள் காணப்பட்டன. பெலகோர்னிதிட்கள் "எலும்பு-பல்" கொண்ட பறவைகள் என்றும் அழைக்கப்பட்டன.
"இந்த அண்டார்டிக் புதைபடிவங்கள் இவை உலகின் மிகப்பெரிய பறக்கும் பறவைகளை மட்டுமல்ல, இதுவரை வாழ்ந்த மிகப் பெரிய பறவைகளையும் குறிக்கும்" என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.
"எங்கள் புதைபடிவ கண்டுபிடிப்பு, 5 முதல் 6 மீட்டர் இறக்கைகள் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது - கிட்டத்தட்ட 20 அடி - பறவைகள் டைனோசர்கள் அழிந்த பின்னர் ஒப்பீட்டளவில் விரைவாக உண்மையான பிரம்மாண்டமான அளவுக்கு பரிணாமம் அடைந்து மில்லியன் கணக்கான ஆண்டுகளாக கடல்களை ஆட்சி செய்தன என்பதைக் காட்டுகிறது என்று கூறினார்.