அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இவ்வளவு செலவா? -வரலாற்றில் அதிக செலவு இந்த தேர்தலாம்-
அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல், வரலாற்றிலே மிக அதிக செல்லவில் நடக்கும் தேர்தலாக அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்திலையில், அமெரிக்காவில் தேர்தல் ஆய்வு அமைப்பான, சென்டர் பார் ரெஸ்பான்சிவ் பாலிடிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில், அடுத்த மாதம் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தல் தான், மிக அதிகமான பணம் செலவழிக்கப்பட்ட தேர்தலாக, தேர்தல் வரலாற்றில் அமைய உள்ளது.
இந்த தேர்தலுக்கு, 80 இலட்சம் கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, 1,03,98,50,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என, தெரிய வந்துள்ளது.
கடந்த, 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஏற்பட்ட செலவை விட, இது இரு மடங்கு அதிகம். மேலும், நன்கொடை வாயிலாக, 6,650 கோடி ரூபாய்க்கு மேல் நிதி பெற்ற, முதல் ஜனாதிபதி வேட்பாளராக, ஜோ பிடன் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.