அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஆர்வம்!! -7 கோடிக்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்குப் பதிவு-

ஆசிரியர் - Editor III
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஆர்வம்!! -7 கோடிக்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்குப் பதிவு-

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 7 கோடிக்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே தபால் மூலமாக தமது வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு எதிர்வரும் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களமிறக்கப்பட்டு உள்ளார். 

இந்நிலையில் தோதலுக்காக, 7 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தபால் மூலமாக முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தெற்று பரவல் அபாயம் காரணமாக இந்த ஆண்டு இத்தனை அதிகம் போ முன்கூட்டியே வாக்குப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

நேற்று புதன்கிழமை நிலவரப்படி, நாடு முழுவதும் 7 கோடிக்கும் மேற்பட்டவர்கள் முன்கூட்டியே வாக்குப் பதிவு செய்துள்ளதாக அமெரிக்க தோதல் திட்ட அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடிக்கிடையே இந்த ஆண்டு அதிபர் தோதலில் முன்கூட்டியே பதிவாகும் வாக்குகளின் விகிதம் புதிய உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு