SuperTopAds

குப்பை வரி தொடர்பில் ஆலோசனை நடத்தப்பட வேண்டும் - நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர்

ஆசிரியர் - Editor IV
குப்பை வரி தொடர்பில் ஆலோசனை நடத்தப்பட வேண்டும் - நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர்

குப்பை வரி தொடர்பில் ஆலோசனை நடத்தப்பட   வேண்டும் என  நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.

நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த சபை கூட்டமும் 2020ஆம் ஆண்டின்  ஒக்டோபர்   மாதத்திற்கான 4 ஆவது   பிரதேச சபையின் 31 ஆவது சபை அமர்வு  செவ்வாயக்கிழமை(27)     நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் சபையின் சபா  மண்டபத்தில்  நடைபெற்றது.

இதன்போது   மத அனுஸ்டானம்  இடம்பெற்ற பின்னர்   2020 செப்டம்பர்   மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல்  2020 செப்டம்பர்    மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல்   தவிசாளர் எம் . ஏ . எம் . தாஹிர்  உரை இடம்பெற்றன.தொடர்ந்து  குப்பை வரி அறவிடப்படுவது தொடர்பில் உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அது சம்பந்தமாக ஆலோசனை பெறப்பட்டது.

மேலும் சபையின் எல்லைக்குட்பட்ட  பகுதிகளில் அனுமதி பெறப்படாத அபிவிருத்தி வேலைகள் சம்பந்தமாக ஆலோசனை பெறப்பட்டதுடன் உறுப்பினர்களான ஏ.எல்.றியாஸ் ஆதம், எஸ்.எம் ஆதம்பாவா ,ஏ.அப்துல் வாகிது ,ஆகியோர்   முன்மொழிவுகளை முன்வைத்து உரையாற்றிய பின்னர் சபைக்கு வந்திருந்த கடிதங்கள் ஆராயப்பட்ட பின்னர்  சபை நடவடிக்கைகள் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.