கொரோனாவை கட்டுப்படுத்தப்போவதில்லை!! -டிரம்பின் உதவியாளர்களின் தலைவர் பரபரப்பு பேச்சு-

ஆசிரியர் - Editor III
கொரோனாவை கட்டுப்படுத்தப்போவதில்லை!! -டிரம்பின் உதவியாளர்களின் தலைவர் பரபரப்பு பேச்சு-

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தப்போவதில்லை, இது சாதாரண காய்ச்சல்போல் தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவியாளர்களின் தலைவரான மார்க் மெடோஸ் தெரிவித்தார். 

அமெரிக்காவில் இதுவரை 86 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிக எண்ணிக்கையை அமெரிக்காதான் கொண்டுள்ளது. அதேபோது உயிரிழப்பு விகிதத்திலும் ஐந்தில் ஒரு பங்கை அமெரிக்கா கொண்டுள்ளது. 

இந்நிலையில் தொற்று பரவலை அதிபர் தடுக்க தவறிவிட்டார் என ஜனநாயக கட்சியின் சார்பாக அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்திருந்தார். இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவியாளர்களின் தலைவரான மார்க் மெடோஸ் செய்தி நிறுவனங்கள் கேள்வியெழுப்பியபோது, நாங்கள் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தப்போவதில்லை என்றும், ஏனெனில் இது ஒரு சாதாரண காய்ச்சல் போல ஒன்றுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் போன்றவை அதனை குறைக்க முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று வாதிட்டார். வரும் நவம்பர் மூன்றாம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மெடோஸ்ஸின் இந்த கருத்து மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு