போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!! -12 பேர் உயிரிழப்பு-

ஆசிரியர் - Editor III
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!! -12 பேர் உயிரிழப்பு-

நைஜீரியா நாட்டில் போலீசாரின் அத்துமீறல்களுக்கு எதிராக 2 வாரங்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் போராட்டக் காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் பிரயோகத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்த நாட்டில்  போலீஸ் பிரிவில் கொள்ளை தடுப்பு சிறப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த சிறப்பு பிரிவு போலீசார் அத்துமீறி நடந்து கொள்வதாகவும் சட்ட விரோத கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. 

இதையடுத்து, புதிதாக உருவாக்கப்பட்ட கொள்ளை தடுப்பு பிரிவை கலைக்க வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக லாகோஸ் நகரில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

போராட்டங்களையடுத்து,  சிறப்பு படை பிரிவை கலைப்பதாக  அதிபர் முகம்மது புஹாரி அறிவித்தார். ஆனாலும், போராட்டத்தை கைவிட மறுத்த போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படை பிரிவில் மேலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும். நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்ற புதிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்தனர். 

இதற்கு மத்தியில் போராட்டத்தை குற்றவாளிகள் தமது கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக லாகோஸ்  ஆளுநர் குற்றம் சாட்டினார். 

இந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில்  12 பேர் பலியாகியுள்ளனர். இந்த தகவலை அம்னெஷ்டி இண்டர்னேஷ்னல் அமைப்பு தெரிவித்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு