கை குண்டை காட்டி மோட்டார் சைக்கிளை தருமாறு மிரட்டல்..! கட்டைக்காட்டில் கை குண்டுடன் 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
கை குண்டை காட்டி மோட்டார் சைக்கிளை தருமாறு மிரட்டல்..! கட்டைக்காட்டில் கை குண்டுடன் 3 பேர் கைது..

கிளிநொச்சி - பொியகுளம் கட்டைக்காடு பகுதியில் கை குண்டுடன் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கடந்த 18ம் திகதி கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக இரு தரப்புக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

முறுகல் நிலை மோதலாக மாறிய நிலையில் ஒரு தரப்பின் மோட்டார் சைக்கிளை மற்றொரு தரப்பு பறித்து சென்றுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த ஒருவர் நேற்றய தினம் கை குண்டை காண்பித்து மோட்டார் சைக்கிளை திருப்பி தருமாறு மிரட்டியுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் செயற்றப்பட்ட முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பொலிஸார் கை குண்டை மீட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை கைது செய்திருக்கின்றனர். 

Radio