இத்தனை படங்களை கைவசம் வைத்திருக்கிறாரா வரலட்சுமி சரத்குமார்?

ஆசிரியர் - Admin
இத்தனை படங்களை கைவசம் வைத்திருக்கிறாரா வரலட்சுமி சரத்குமார்?

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு தவிர்க்க முடியாத நடிகையாக மாறியுள்ளார் வரலட்சுமி சரத்குமார். தற்போது கைவசம் 10 படங்களை வைத்துள்ளார் வரலட்சுமி. முன்னணி நடிகர்கள் அனைவரின் படத்திலும் நடித்து வருகிறார். எச்சரிக்கை, மிஸ்டர் சந்திரமௌலி, பாம்பன் உள்ளிட்ட படங்கள் இதில் குறிப்பிடதக்கவை. இந்த படங்களில் அனைத்து கதாபாத்திரங்களும் வித்தியாசமானவை என்கிறார் வரலட்சுமி.

மேலும் வரலட்சுமி மாரி 2, மற்றும் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 62 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.